மிகப்பெரும் விலைக்கு சைரன் படத்தைக் கைப்பற்றிய ஹாட்ஸ்டார்!

 மிகப்பெரும் விலைக்கு சைரன் படத்தைக் கைப்பற்றிய ஹாட்ஸ்டார்!

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த சைரன்.

ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இப்படமானது வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை விஜய் டிவியும், ஓடிடி உரிமையை டிஸ்னி + ஹாட்ஸ்டாரும் கைப்பற்றியிருக்கிறது.

சுமார் 40 கோடிக்கு இந்த வியாபாரம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related post