இன்று யூ-டியுப் தளத்தில் வெளியாகிறது “ஹே ராம்”!

 இன்று யூ-டியுப் தளத்தில் வெளியாகிறது “ஹே ராம்”!

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹே ராம் திரைப்படம் 2000 ல் வெளியானது. இந்த திரைப்படத்தில் பாலிவுட் பிரபலம் நடிகர் ஷாரூக் கான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஹேம மாலினி, ராணி முகர்ஜி, நாசர், சவுகார் ஜானகி, வி.எஸ் இராகவன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி மகேந்திரன், சந்த்ரஹாசன், வையாபுரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜாவின் இசை பெரும் பலமாக இருந்தது இப்படத்திற்கு.

23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை மீண்டும் காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. திரையில் இல்லை உங்கள் வீடுகளிலே இப்படத்தை காணலாம்.

ஆம், இப்படத்தை யூ டியுப் தளத்தில் இன்று வெளியிட இருக்கிறது ராஜ் கமல் நிறுவனம். இன்று முதல் இலவசமாக இப்படத்தை இணையத்தில் காணலாம்.

Related post