2.2 கோடி பார்வைகளை கடந்த “கங்குவா” க்ளிம்ப்ஸ்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது “கங்குவா”. சுமார் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கங்குவா படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது.
இது வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 2.2 கோடி பார்வைகளை கடந்து அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருக்கும் இந்த க்ளிம்ப்ஸ், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிக அளவில் எகிற வைத்துள்ளது.
விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என்றும், ரிலீஸ் தேதி அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு கூறியுள்ளது.