ஒரு வழியாக முடிவுக்கு வரும் “இந்தியன் 2”… ரிலீஸ் ப்ளான் செய்யும் படக்குழு!

 ஒரு வழியாக முடிவுக்கு வரும் “இந்தியன் 2”… ரிலீஸ் ப்ளான் செய்யும் படக்குழு!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க சில வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் தான் “இந்தியன் 2”.

படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல பிரச்சனைகளை படத்தினை சுற்றி வளைத்தது. பல இன்னல்களை சந்தித்த இப்படம், ஒரு வழியாக சில மாதங்களுக்கு முன் மீண்டும் தனது படப்பிடிப்பினை துவங்கியது.

இந்த சூழலில், படத்தினை படப்பிடிப்பினை முடிக்கவிருக்கிறது படக்குழு. ஆம், இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதையும் முடிக்கவிருக்கிறது.

படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

அடுத்த வருட பொங்கலுக்கு இத்திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர ப்ளான் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post