இலங்கை தொழிலதிபர் மகளை மணக்கும் சிம்பு!?

 இலங்கை தொழிலதிபர் மகளை மணக்கும் சிம்பு!?

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், தயாரிப்பாளர் என முகங்களை கொண்டு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையோடு இருப்பவர் தான் சிம்பு.

இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், சிம்புவுக்கு ஒரு கோடீஸ்வர பெண்ணை திருமணத்திற்கு பேசி முடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவம் படித்திருக்கும் அந்தப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் அவர் சிம்புவின் தீவிர ரசிகை எனவும் அவருடைய தந்தை பல தொழில்களை செய்யும் தொழிலதிபர் எனவும் கூறப்படுகிறது.

கூடிய விரைவிலேயே சிம்புவின் திருமணம் குறித்த அறிவிப்புகளை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

 

Related post