முதல் நாளில் முப்பது கோடி.? ஜெயிலர் படைத்த சாதனை!

 முதல் நாளில் முப்பது கோடி.? ஜெயிலர் படைத்த சாதனை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படமானது நாளை மறுதினம் வெளியாக இருக்கிறது.

இந்த சூழலில், படத்திற்கான டிக்கெட் விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புக் மை ஷோ மூலமாக தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது.

இதுவரை தமிழகத்தில் மட்டும் சுமார் 20.97 கோடி ரூபாய் முதல் நாள் மட்டும் வசூலாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்நாடகாவில் 4.9 கோடியும், தெலுங்கில் 2.75 கோடியும் கேரளாவில் 1.5 கோடியும் இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் 1.10 கோடியும் முதல்நாள் ஆன்லைன் டிக்கெட் மூலமாக கிடைக்கப்பெற்றுள்ளது.

மொத்தமாக 31.22 கோடி இதுவரை வசூலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Related post