சத்தமில்லாமல் நடந்து முடிந்த போட்டோ ஷூட்…. “ஜெயிலர்” படக்குழு ஹாப்பி அண்ணாச்சி!!

 சத்தமில்லாமல் நடந்து முடிந்த போட்டோ ஷூட்…. “ஜெயிலர்” படக்குழு ஹாப்பி அண்ணாச்சி!!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் தான் ஜெயிலர்.

சில தினங்களுக்கு முன் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வைரலானது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் டெஸ்ட் போட்டோஷூட் நடைபெற்றிருக்கிறது. இதில் ரஜினியின் தோற்றத்தைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் மிரண்டு போனார்களாம்.. படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனராம்.

ஓய்வு பெற்ற சிறை காவல் அதிகாரியாக தோன்றவிருக்கிறாராம் ரஜினி. இதற்காக மிக பிரம்மாண்டமாக ஐதராபாத்தில் செட் போடப்பட்டுள்ளதாம்.

ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

 

Related post