ஜெயிலர் விமர்சனம்

 ஜெயிலர் விமர்சனம்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”.

கதைப்படி,

ஜெயிலராக இருந்து ரிட்டையர்ட் ஆன ரஜினிகாந்தின் மனைவி தான் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு மகனாக வருகிறார் வசந்த் ரவி. வசந்த் ரவியின் மனைவி மிர்ணா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இதுதான் ரஜினிகாந்தின் குடும்பம். போலீஸாக இருக்கும் வசந்த் ரவி, சிலை கடத்தல் வழக்கு ஒன்றை விசாரித்து வருகிறார்.

சிலை கடத்தலை தொழிலாக செய்து வருகிறார் விநாயகன். அவரை சீண்டும் போது வசந்த் ரவி காணாமல் போய் விடுகிறார். போலீஸ் தரப்பில் இருந்து வசந்த் ரவி கொல்லப்பட்டு விட்டதாக ரஜினியிடம் கூறிவிடுகிறார்கள்.

மகனை இழந்ததால் உடைந்து போகிறார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து மகனை தொட்டவர்களை தேட ஆரம்பிக்கிறார் ரஜினிகாந்த். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

மொத்த படத்தையும் ஒருவராக தன் தோள் மீது சுமந்திருக்கிறார் ரஜினிகாந்த். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்தின் காமெடி, எமோஷன்ஸ், ஆக்‌ஷன், ஸ்டைல் என அனைத்தையும் மொத்தமாக கொண்டு வந்து முழு ரஜினிகாந்த் படமாக படைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

தரமான படமாக கொடுத்து ரசிகர்களுக்கு தனி விருந்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்னா இருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை நன்றாகவே செய்திருக்கிறார்கள்..

வசந்த ரவி காட்சிகளில் ஓகே தான் என்றாலும் இன்னும் கொஞ்சம் பெட்டராக நடித்திருந்திருக்கலாம் ..

ரஜினிக்கு தகுதியான வில்லனாக தோன்றிய அசத்தியிருக்கிறார் விநாயகன். கண் பார்வையிலும் மிரட்டலான பேச்சிலும் உடல் மொழியிலும் தனி ரகமாய் ஜொலித்திருக்கிறார் விநாயகன்..

மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் மூவரும் தங்களுக்கான கேமியோ ரோல் கேரக்டரை செய்து முடித்திருக்கிறார்கள்.. மூவரும் எண்ட்ரி ஆகும் காட்சிகளில் திரையரங்குகளில் விசில் பறக்கிறது..

படத்திற்கு மிகப் பெரும் பலமாக வந்து நிற்கிறது ஒளிப்பதிவு இசையும்.. பின்னணியில் வழக்கம்போல் தனது மாயாஜாலத்தை வெறித்தனமாகவே காட்டி மிரட்டி இருக்கிறார் அனிருத்..

காவாலா பாடல் ஆட்டம் போட வைக்கிறது அந்த பாடலுக்கு நடன அமைப்பு பெரிதாகவே கவர்ந்தது..

இந்த படத்தில் பெரிதான சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் துப்பாக்கி மற்றும் கத்தி எடுத்து கொலை செய்வது காட்சிக்கு காட்சி மிரள வைத்திருக்கிறது..

முதல் பாதி மிரட்டலாக கொடுத்திருந்தாலும் இரண்டாம் பாதியின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருப்பது ரசிகர்களை சற்று தொய்வடைய தான் வைத்திருக்கிறது… இரண்டாம் பாதியில் சின்ன சின்ன காட்சிகளில் கத்திரியை இன்னும் போட்டிருந்தால் இன்னும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஜெயலரை கரை சேர்த்திருக்கலாம்…

எதுவாகினும் ரஜினியின் படமாக கொண்டாட தகுதியான படமாகவும், சூப்பர் ஸ்டார் படமாகவும் ஜெயிலரை கொண்டாடலாம்..

Rating : 3.75/5

Related post