ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த் ஜான் கொக்கன்!

 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த் ஜான் கொக்கன்!

உலகம் முழுவதும் இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தனது ஆசானாக விளங்குபவர்களுக்கு பலரும் நன்றி தெரிவித்து வரும் நிலையில்,

நடிகர் ஜான் கொக்கன் நடிகர் அஜித்குமாருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “ கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதற்காகவே நமக்கு ஆசிரியர்களை கொடுத்துள்ளார். நாம் வாழ்வில் உயரவும், நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

எனக்கு அதுபோல அஜித்குமார்! எனக்கு மட்டுமின்றி, கோடிக்கணக்கானோருக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு நன்றி. என் வாழ்வில் வந்ததற்கும், நான் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயங்களை செய்ய என்னை ஊக்குவித்ததற்கும் நன்றி. I LOVE YOU A LOT SIR!”. என்று கூறியுள்ளார்.

Related post