சினிமாவின் ரசிகனாக பிரபாஸ் படத்தில் நடிக்கிறேன் – கமல்ஹாசன்!

 சினிமாவின் ரசிகனாக பிரபாஸ் படத்தில் நடிக்கிறேன் – கமல்ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசன் பிரபாஸின் “ப்ராஜெக்ட் கே” என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு தான் கமல்ஹாசன் சுமார் 120 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ப்ராஜெக்டில் இணைந்தது குறித்து நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை அளித்திருக்கிறார்.

அந்த அறிக்கையில், ”நான் ஒரு நடிகன் என்பதையும் தாண்டி சினிமாவின் தீவிர ரசிகனாவேன். எந்த ஒரு புதுமையான விஷயங்களை பாராட்டும் ரசிகனான எனக்கு ப்ராஜெக்ட் கே படத்தில் இயக்குனர் நாக் அஸ்வின் எடுத்துள்ள கதைக்களத்தை கேட்டுவிட்டு ஒரு ரசிகனாக ரசித்தேன். அதைப்போல சினிமா ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகின்றேன்.

மேலும் அமிதாப் பச்சனுடன் நான் ஏற்கனவே பணியாற்றியுள்ளேன் என்றாலும் தற்போது மீண்டும் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கின்றேன்.” என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.

 

Related post