ஜெயிலர் வெற்றி; ரஜினிக்கு வாழ்த்து கூறிய கமல்!

 ஜெயிலர் வெற்றி; ரஜினிக்கு வாழ்த்து கூறிய கமல்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் தான் “ஜெயிலர்”.

பல தரப்பு ரசிகர்களையும் படம் வெகுவாக கவர்ந்ததால், படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக கிளம்பிட்டார். தற்போது ரிஷிகேஷில் இருந்து வரும் ரஜினிக்கு, உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்த்து கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், ஜெயிலர் படத்துக்கு கிடைக்கும் வரவேற்புக்கு போன் மூலம் ரஜினிகாந்துக்கு வாழ்த்து கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் படத்தின் இயக்குநர் நெல்சனையும் போனில் அழைத்து கமல்ஹாசன் பேசியதாகவும் கூறப்படுகிறது.

 

Related post