கங்குவா படத்தில் இப்படியொரு முயற்சியா?

சூர்யா நடிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படம் தான் “கங்குவா”.
படத்தின் படப்பிடிப்பானது விரைவில் முடிவடைய இருக்கிறது. முழு வீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தினைத் தொடர்ந்து சுதா கங்கோரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.
கங்குவா படத்தில் மொத்தமாக 5 பைட் சீன்கள் இடம்பெறுகிறதாம். இந்த சண்டை காட்சியானது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐந்து பரப்பில் நடைபெறும்படியாக உருவாக்கியிருக்கிறாராம் சிவா. இந்த சண்டைக் காட்சிகள் படத்தில் பெரிதாக கவனம் ஈர்க்கும் என்கிறார்கள்.