நான் முடிச்சிட்டேன்… கங்குவா குறித்து சூர்யா

 நான் முடிச்சிட்டேன்… கங்குவா குறித்து சூர்யா

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வரும் படம் தான் கங்குவா.

சுமார் பத்து மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் தயாரித்து வருகிறார்.

படத்தின் மீது தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா, தனது எக்ஸ் தளத்தில் படத்தினை பற்றிய அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அதில், “கங்குவா திரைப்படத்தில் என கடைசி காட்சியை நடித்து முடித்துள்ளேன். படப்பிடிப்பு தளமெங்கும் நேர்மறையான சிந்தனை பரவியிருந்தது. படபிடிப்பின் முடிவு பலவற்றின் தொடக்கமாகும்.

அழகிய நினைவுகளை தந்த இயக்குநர் சிவாவிற்கும் அவரது குழுவிற்கும் நன்றி. கங்குவா தனிச்சிறப்பு மிக்கது. வெள்ளித்திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related post