மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் “தக் லைஃப்”

உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குனர் மணிரத்னமும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் திரைப்படம் “தக் லைஃப்”. இப்படம், கமல்ஹாசன் நடிக்கும் 234வது படமாகும்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ், ஆர். மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், சண்டைப்பயிற்சி அன்பறிவு, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த மெகா கூட்டணியில் இணைகிறார்கள்.
இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளைமுன்னிட்டு நேற்று இப்படத்தின் அறிவிப்பு மற்றும் வீடியோ வெளியானது.
இந்த வீடியோவானது கமல் ரசிகர்களை மட்டுமல்லாது சினிமா ரசிகர்கள் அனைவரின் கவனைத்தையும் ஈர்த்து வருகிறது குறிப்பிடத்தக்கது.