75 சதவீதம் வேண்டும்; திரையரங்குகளுக்கு ஆர்டர் போட்ட லியோ தயாரிப்பாளர்!

 75 சதவீதம் வேண்டும்; திரையரங்குகளுக்கு ஆர்டர் போட்ட லியோ தயாரிப்பாளர்!

விஜய் நடிக்க லலித் குமார் தயாரிக்க உருவாகியிருக்கிறது லியோ. படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார்.

லியோ படம் வெளியான இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அதிக இருக்கைகள் கொண்ட பல திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை

படத்தின் முதல் நாள் வசூலில் 75 சதவீதத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளதே இதற்கு காரணம் ..

தயாரிப்பு நிறுவனம் கேட்ட பங்கு கொடுத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறி வரும் திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

 

Related post