லியோ விழா ரத்து; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 லியோ விழா ரத்து; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் 30 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் எல்லாம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது.

அதிக டிக்கெட் கோரிக்கை மற்றும் பாதுகாப்பு கட்டுபாடுகளை கருத்தில் கொண்டு இசை வெளியீட்டு விழா நடத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கு அரசியல் அழுத்தமோ அல்லது வேறு எந்த காரணமும் இல்லை என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Spread the love

Related post