மாவீரன்; முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்!

 மாவீரன்; முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்!

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி நேற்று வெளியான திரைப்படம் தான் “மாவீரன்”.

ட்ரெய்லர் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால், படத்திற்கும் அதீத எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், நேற்று மாவீரன் வெளியாகி நல்ல விமர்சனத்தைப் பெற்றது..

இதனால், நேற்று மாலைக்குப் பிறகு படம் பிக்-அப் ஆக ஆரம்பித்தது. இரவுநேர காட்சிகளில் மக்கள் வெள்ளம் படையெடுத்தது.

இந்நிலையில், நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 7.6 கோடி ரூபாயும், இந்திய அளவில் 8.5 கோடியாகவும், உலகம் முழுவதும் சுமார் 10 கோடி வரையிலும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருட வெளியான படங்களில் வசூலில் டாப் 5 இடத்திற்குள் வந்துள்ளது மாவீரன்.

 

Related post