234 தொகுதிகளிலும் விஜய் பயிலகம்; இன்று திறப்பு!

 234 தொகுதிகளிலும் விஜய் பயிலகம்; இன்று திறப்பு!

நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி பல சேவைகளை தனது மன்றத்தின் வாயிலாக செய்து வருகிறார்..

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மன்ற நிர்வாகிகளை அழைத்து இரவு நேர பயிலகம் ஒன்றை துவங்க மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இருக்கும் 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு சுமார் 4 பயிலகம் என ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது.

இன்று முதல் இந்த பயிலகம் திறக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த இரவு நேர பயிலகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Related post