தேசிய விருதுகளை குவித்த தமிழ் சினிமா… சூரரைப் போற்று படத்திற்கு மட்டும் 5 விருதுகள்!

 தேசிய விருதுகளை குவித்த தமிழ் சினிமா… சூரரைப் போற்று படத்திற்கு மட்டும் 5 விருதுகள்!

வருடந்தோறும் நடைபெறும் தேசிய விருதுகள் வழங்கும் விழா, இவ்வருடமும் நடைபெறவிருக்கிறது.

இதற்காக 2020 ஆம் ஆண்டு வெளியான, சென்சார் பெற்ற படங்கள் வரிசைப்படுத்தப்பட்டன.

இதில், சிறப்பான படங்கள் தேர்தெடுக்கப்பட்டு நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சூரரைப் போற்று படத்திற்கு 5 விருதுகளை குவித்துள்ளது.

சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை என மொத்தமாக 5 விருதுகளை வாரிக்குவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதையும் தட்டிச் சென்றுள்ளது.

மேலும், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த துணை நடிகை என சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது.

 

Related post