மீண்டும் வைரலாகும் “நாட்டுக்கூத்து” பாடல்..

 மீண்டும் வைரலாகும் “நாட்டுக்கூத்து” பாடல்..

இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என் டி ஆர் நடிப்பில் மிகப்பெரும் வசூல் வேட்டை நிகழ்த்திய படம் தான் “ஆர் ஆர் ஆர்”.

இப்படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலானது பட்டி தொட்டியெங்கும் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி பல்வேறு விருதுகளை பெற்ற வண்ணம் இருக்கிறார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தென்கொரிய தூதரக ஊழியர்கள் இந்த நாட்டுக் கூத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை அந்த தூதரகமே வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருது.

53 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் கொரியன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தூதரக ஊழியர்கள் நடனமாடியுள்ளார்கள். இந்தியாவுக்கான தென்கொரிய தூதர் சங் ஜேபாக்கியும் இந்த வீடியோவில் தோன்றுகிறார்.

இதனால், இந்த பாடல் மீண்டும் வைரலாகி வருகிறது.

 

Related post