பார்ட்னர் விமர்சனம்

 பார்ட்னர் விமர்சனம்

இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வாணி, யோகிபாபு, பாண்டியராஜன், ரவி மரியா, ஜான் விஜய்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “பார்ட்னர்”.

முழுக்க முழுக்க காமெடி என்ற என்ற கருவை வைத்து உருவாகியிருக்கும் இப்படமானது ரசிகர்களை எந்த அளவிற்கு கவர்ந்தது என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

கதைப்படி,

இறந்தவர்களின் உடலில் இருக்கும் டி என் ஏ’வை எடுத்து, வாழும் உயிருக்குள் செலுத்தி இறந்தவரின் நினைவுகளை கொண்டு வரும் மருந்தினை கண்டுபிடிக்கிறார் பாண்டியராஜன்.

இந்த மருந்தினை திருட்டுத்தனமாக கைப்பற்ற நினைக்கிறார் ஜான் விஜய். தன் குடும்பத்தின் கஷ்டத்திற்காக திருட்டு வேலையில் இறங்குகிறார் ஆதி. அதற்காக தன் நண்பன் யோகிபாபுவையும் உடன் சேர்த்துக் கொள்கிறார்.

அந்த மருந்தினை திருடி எடுத்துத் தந்தால் 50 லட்சம் தருவதாக ஆதியிடம் கூறிவிடுகிறார் ஜான் விஜய்.

அதற்காக, அந்த மருந்தினை திருட செல்லும் நேரத்தில் அந்த மருந்து தெரியாமல் யோகிபாபுவிற்கு செலுத்தப்பட்டு விடுகிறது. இதனால், ஆணாக இருக்கும் யோகிபாபு பெண்ணாக (ஹன்சிகா) மாறிவிடுகிறார். அதன்பின் நடக்கும் அட்ராசிட்டியே படத்தின் மீதிக் கதை.

மரகத நாணயம் படத்தில் கொடுத்த ஒரு நடிப்பை இப்படத்திலும் கொடுத்திருக்கிறார் ஆதி. கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்து அசத்தியிருக்கிறார். யோகிபாபுவோடு சேர்ந்து அட்ராசிட்டி செய்திருக்கிறார் ஆதி.

யோகிபாபுவின் டைமிங்க் காமெடி படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

ஒருகட்டத்திற்குமேல், தெகட்ட தெகட்ட கொடுக்கும் இனிப்பு போல ஆகிவிடுகிறது படத்தின் கதை..

ஹேய் என்னப்பா இதெல்லாம் காமெடியா .? ஆமா இதுதான் காமெடி என சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், நமக்கென்னமோ வெறுப்பு ஏற்பட்டது தான் மிச்சம்..

காமெடி தான் கதைக்களம் என்றால் அதை தரமான கதாசிரியரை வைத்து நகர்ந்திருக்கலாம். ஆனால், நடந்ததோ அதற்கு நேர்மாறாக..

காமெடி என்ற பெயரில் நம்மை சோதனையின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் ஒட்டுமொத்த படக்குழுவும்.

ஹன்சிகாவின் ஓவர் ஆக்டிங் ஒட்டுமொத்த படத்தையும் ரசிக்க வைக்கத் தவறியிருக்கிறது.

ஷபீர் அகமதுவின் ஒளிப்பதிவு ஓகே தான் என்றாலும், சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை ரசனை கொடுத்திருக்கிறது.

கதையிலும், காமெடி தளத்திலும் இன்னும் பெரிதாகவே மெனக்கெடல் செய்திருக்கலாம்.

பார்ட்னர் – பாஸ் ஆகவில்லை…-  2.5/5

Related post