1000 கோடி வசூலை வாரிக்குவித்த பதான்

 1000 கோடி வசூலை வாரிக்குவித்த பதான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படம் தான் “பதான்”.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது இந்த படம்.

தொடர்ந்து வசூலில் ஏறுமுகமாக இருந்து வந்த பதான், இதுவரை சுமார் 1026 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்துள்ளது.

இது பாலிவுட் ரசிகர்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஏனென்றால், சமீபத்தில் வெளிவந்த பாலிவுட் திரைப்படங்கள் எதுவும் பெரிதான வசூலை கொடுக்கவில்லை என்பதால், ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், பதானின் வசூல் வேட்டை ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.

 

Related post