புஷ்பா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 புஷ்பா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் புஷ்பா.

பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது இதன் வசூல். இதனால் இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல், படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோவும் அனைவரையும் கவர்ந்தது.

சமீபத்தில் புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ‘புஷ்பா-2’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, படத்தின் போஸ்டரை ஷேர் செய்த படக்குழு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 

Related post