தனது பிறந்தநாளில் சூப்பர் ஸ்டாரை சந்தித்த ராகவா லாரன்ஸ்!!

 தனது பிறந்தநாளில் சூப்பர் ஸ்டாரை சந்தித்த ராகவா லாரன்ஸ்!!

ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம் படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற ராகவா லாரன்ஸ், புதிய முடிவை எடுத்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார்…

இந்த நாளில் இருந்து புதிய முடிவொன்றை எடுத்துள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். ஏற்கனவே பல சமூக சேவைகள் செய்து வரும் நான், இனிவரும் நாட்களில் அன்னதானம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார். பசியின் கொடுமை எனக்கு நன்றாகவே தெரியும், அதனால் என்னால் முடியும் நேரங்களில் நானே நேரில் சென்று பசித்திருப்பவர்களுக்கு உணவு வழங்க உள்ளேன், அதற்கு உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை என பதிவிட்டுள்ளார்.

 

Related post