லியோ” வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் – ரஜினிகாந்த்!

 லியோ” வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் – ரஜினிகாந்த்!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பானது திருநெல்வேலி பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு குஜராத் சென்று இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டைக் கண்டு களித்தார்.

இந்நிலையில், மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கினார் ரஜினிகாந்த்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், “ லியோ படம் வெற்றி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

 

Related post