’டான்’ படத்தை பாராட்டிய ராமதாஸ்; நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்!

 ’டான்’ படத்தை பாராட்டிய ராமதாஸ்; நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்!

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “டான்”. இப்படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று வசூலிலும் சக்கை போடு போட்டது.

பலரும் இப்படத்தின் வெற்றிக்கு படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். பெற்றோரை அவர்கள் இருக்கும்போது கொண்டாடுங்கள் என்ற பாடம் சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனை ரீட்வீட் செய்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது நன்றியை மருத்துவர் ராமதாஸுக்கு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

 

Related post