ரஜினி ஒரு ஜீரோ… வெளுத்து வாங்கிய ரோஜா!

 ரஜினி ஒரு ஜீரோ… வெளுத்து வாங்கிய ரோஜா!

சில தினங்களுக்கு முன் ஹைதராபாத் சென்றிருந்த ரஜினிகாந்த், ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவின் 100-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.

இவ்விழாவிற்கு தலைமை தாங்கியிருந்தார் முன்னள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. விழா மேடையில் பேசிய ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த புகழாரத்தை கேட்ட ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதில், “என்.டி.ராமராவின் 100-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியது சிரிப்பை வரவழைத்துள்ளது. ஹைதராபாத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலம் 2003-ம் ஆண்டோடு முடிவடைந்துவிட்டது, இந்த இருபது ஆண்டுகளில் தான் ஹைதராபாத் இவ்வளவு வளர்ச்சி கண்டுள்ளது. அப்படி இருக்கையில் ஆட்சியில் இல்லாத சந்திரபாபு நாயுடு எப்படி ஹைதராபாத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தார். முதுகில் குத்தியவனை எப்படி என்.டி.ஆர் ஆசீர்வதிப்பார்? ரஜினிகாந்த் உண்மை தெரிந்து தான்பேசுகிறாரா என்று தெரியவில்லை.

என்.டி.ஆரின் மரணத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என்று அனைவருக்கும் தெரியும். பிரதமராக வர வேண்டியவரை தனது சூழ்ச்சியால் வீழ்த்தி, அவரது ஆதரவாளர்களையே அவருக்கு எதிராக திருப்பி பதவியை இழக்க வைத்தது சந்திரபாபு நாயுடு தான் என்று கூறினார்.

மேலும் பேசியவர், தனது மருமகன் சந்திரபாபு நாயுடு ஒரு திருடன், அவனை யாரும் நம்ப வேண்டாம் என்று என்.டிஆர் கூறியிருந்தார். இதெல்லாம் ரஜினிகாந்துக்கு தெரியாதா? வேண்டுமென்றால் என்.டி.ஆர் பேசிய சிடி என்னிடம் உள்ளது, அதை ரஜினிகாந்திற்கு அனுப்பி வைக்கிறேன், அதை பார்த்து அவர் தெரிந்துகொள்ளட்டும். ரஜினி அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார், அப்படி இருக்கையில் அவர் அரசியல் பேசவேகூடாது.

இதுவரை தெலுங்கு ரசிகர்களின் மனதில் சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினிகாந்த், சந்திரபாபுவை புகழ்ந்து பேசி பூஜ்ஜியமாக மாறிவிட்டார். ரஜினியை உயர்வாக கற்பனை செய்து வைத்திருந்தோம், ஆனால் அவரது பேச்சு அவரை பூஜ்ஜியமாக்கி விட்டது. இப்படி பேசியதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை, அவர் நலனுக்காகவே இந்த அறிக்கையை வெளியிட்டேன்.’ என்று ரஜினியை கடுமையாக சாடியிருக்கிறார்.

 

Related post