100 மில்லியன் பார்வைகளை கடந்த “சலார்” டீசர்!

 100 மில்லியன் பார்வைகளை கடந்த “சலார்” டீசர்!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் தான் “சலார்”. நேற்று முன் தினம் இப்படத்தின் டீசர் வெளியானது.

கே ஜி எஃப் படத்திற்குபிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவரும் படம் இதுவென்பதால், படத்திற்கு மிகப்பெரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், வெளியான டீசரானது இரண்டு நாட்களில் சுமார் 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சுமார் 1.8 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது இந்த டீசர்.

அதிரடியான காட்சியமைப்பும் பின்னணி இசையும் டீசருக்கும் மிகப்பெரும் பலமாக அமைந்திருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post