விக்ரமோடு இணையும் லோகேஷ் கனகராஜ்!

 விக்ரமோடு இணையும் லோகேஷ் கனகராஜ்!

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தங்கலான்”. சில தினங்களுக்கு முன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்நிலையில், அடுத்த படத்திற்கான பணிகளை துவக்கியிருக்கிறார் நடிகர் விக்ரம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜோடு கைகோர்த்திருக்கிறார் விக்ரம். ஆம், லோகேஷ் கனகராஜின் கதையில் அவரது உதவி இயக்குனர் பால சுப்ரமணியம் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.

இப்படத்தினை, லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்கவிருக்கிறாராம். விக்ரமின் 62வது படமாக இப்படம் உருவாக இருக்கிறது.

படத்தினை பற்றிய மற்ற விபரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post