மிகப்பெரும் பட்ஜெட்டில் சர்தார் 2

 மிகப்பெரும் பட்ஜெட்டில் சர்தார் 2

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் தான் சர்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறது படக்குழு.

சர்தார் 2 படத்தை மிகப்பெரும் பொருட் செலவில் எடுக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். மேலும், இப்படத்தில் வில்லனாக நடிக்க மிகப்பெரிய நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

பிப்ரவரி மாதம் படத்திற்கான பூஜை நடத்தப்பட்டு, படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறதாம்.

Related post