வாரிசு இசை வெளியீட்டு விழா – தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம்!

 வாரிசு இசை வெளியீட்டு விழா – தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம்!

தளபதி விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு அரங்கில் இருந்த இருக்கைகள் பலவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சேதம் குறித்த கணக்கெடுப்புக்குப் பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்கப்படும் என நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியாகியுள்ளது.

 

Related post