வரவேற்பைப் பெற்ற “சைரன்” பட டீசர்

 வரவேற்பைப் பெற்ற “சைரன்” பட டீசர்

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “சைரன்”.

டிசம்பர் மாதத்தில் வெளியிடும் வண்ணத்தில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

குறிப்பாக ஜெயம் ரவி லுக் மற்றும் பரபரப்பாக காட்சிகள் நகர்வது மற்றும் மேக்கிங் இவை அனைத்தும் அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது.

ஜி வி பிரகாஷ் குமாரின் இசையும் மிரள வைத்திருக்கிறது.

விரைவில் ட்ரெய்லரும் வெளியாகும் என் கூறப்பட்டுள்ளது.

Related post