பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. யார் அவர் தெரியுமா.?

 பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. யார் அவர் தெரியுமா.?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தீபாவளி தின கொண்டாட்டமாக திரையரங்கிற்கு வெளிவர இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து மாவீரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதன்பிறகு ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படம் என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படங்களைத் தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் தமிழகத்தைச் சேர்ந்த நட்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து ஐபிஎல் தொடர்களில் விளையாடி தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் நட்ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிவா நடிக்க இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

 

Related post