சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்”!!

 சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்”!!

டான் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்குனரோடு கைகோர்த்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் என்பதால், அதற்கான போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதற்கு முன் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

பெயர் வைக்கப்படாமல் உருவாகி வந்த இப்படத்திற்கு தற்போது “பிரின்ஸ்” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ரியா போஸ்கா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி, ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

 

Related post