விக்கி – நயன்தாரா திருமணத்தையொட்டி 1 லட்சம் பேருக்கு உணவு!

 விக்கி – நயன்தாரா திருமணத்தையொட்டி 1 லட்சம் பேருக்கு உணவு!

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரின் காதல் திருமணம் நேற்று சென்னை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் நடைபெற்றது.ம்

இந்த திருமண நிகழ்விற்கு 200 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முக்கியமான பிரமுகர்கள் மட்டுமே இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இவர்கள் இந்த திருமணத்தை முன்னிட்டு, தமிழகத்தில் சுமார் 1 லட்சம் நபர்களுக்கு மதிய நேரத்தில் கல்யாண விருந்து கொடுக்கும் விதமாக உணவளிக்க ஏற்பாடு செய்து செய்யப்பட்டிருந்தது.

ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களிலும், திருவண்ணாமலை உள்ளிட்ட சில முக்கியமான கோயில்களிலும் மதிய உணவு கொடுக்க நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ஏற்பாடு செய்திருந்தனர்.

நேற்று மாலை, திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 

Related post