ரஜினிக்கு ஓகேன்னா நான் ரெடி… கமல்ஹாசன் அதிரடி!

 ரஜினிக்கு ஓகேன்னா நான் ரெடி… கமல்ஹாசன் அதிரடி!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்திருக்கும் படம் தான் “விக்ரம்”. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் அனைவராலும் பெரிதாக பாராட்டப்பட்டு வெற்றிநடை போடுகிறது.

வசூலிலும் புதிய சாதனையை படைத்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர்.

அப்போது நீங்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா.? என்று கேள்வி எழுப்பியதற்கு, ”நான் ரெடியாக இருக்கிறேன்.. அவர் ரெடியாக வேண்டும்… இயக்குனர் ரெடியாக வேண்டும், கதை ரெடியாக வேண்டும்.. எல்லாம் ரெடி என்றால் படத்திற்கு ரெடியாகி விடலாம்” என்று கூறினார் கமல்ஹாசன்.

 

Related post