வெப் தொடரை இயக்கும் செளந்தர்யா ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இவரின் இரண்டாவது மகளான செளந்தர்யா ரஜினிகாந்த், கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 உட்பட இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார்.
இவர் அடுத்தபடியாக வெப் தொடர் ஒன்றை இயக்கவிருக்கிறாராம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த தொடரில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.