லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் கதை இதுதான்!?

 லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் கதை இதுதான்!?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்க லியோ படத்தினை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது.

ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தினை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

போலி என்கெளண்டர் பற்றிய கதையைத் தான் ரஜினிக்காக தயார் செய்து வைத்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். இதில், ரஜினிகாந்த் போலீஸ் உயரதிகாரியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related post