சென்னையில் தொடங்கிய “சூர்யா 42” படப்பிடிப்பு!

 சென்னையில் தொடங்கிய “சூர்யா 42” படப்பிடிப்பு!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது சூர்யாவின் 42 வது படம். இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படாத சூழலில், படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வந்தது.

இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தை யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகும் இப்படம் மொத்தம் 10 மொழிகளில் தயாராகி வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், பல நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்கிடையே இலங்கையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அது வதந்தி என பின்னர் உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. இதில் சூர்யா நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

 

Related post