சூர்யா 43: சுதா கங்கோரா போடும் பெரிய ப்ளான்!

 சூர்யா 43: சுதா கங்கோரா போடும் பெரிய ப்ளான்!

சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சூர்யாவோடு கைகோர்க்கவிருக்கிறார் இயக்குனர் சுதா கங்கோரா.

இப்படம், விரைவில் துவங்கப்பட இருக்கிறது. இப்படத்தில் மலையாள நட்சத்திரம் துல்கர் சல்மானும் நடிக்கவிருக்கிறாராம்.

சூர்யா 43 படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார். விரைவில், இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் முறையாக சூர்யாவோடு துல்கர் சல்மான் இணையவிருப்பதால் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு நிலவ ஆரம்பித்துள்ளது.

 

Related post