தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் “ஜெயிலர்”; கோரிக்கை வைத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்!

 தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் “ஜெயிலர்”; கோரிக்கை வைத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “ஜெயிலர்”. 

படத்தின் படப்பிடிப்புமுடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் சில தினங்களுக்கு முன் கோலாகலமாக நடைபெற்றது. 

இம்மாதம் 10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், ஜெயிலர் படத்தினை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். 

குடும்பமாக சூப்பர் ஸ்டார் படத்தை பார்க்க வருவார்கள் என்பதால், இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Related post