ரஜினியின் 170வது படத்தை இயக்கப்போவது இவரா.? அடித்தது ஜாக்பாட்!

 ரஜினியின் 170வது படத்தை இயக்கப்போவது இவரா.? அடித்தது ஜாக்பாட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிக்கும் 169வது படமான ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சூப்பர்ஸ்டாரின் 170வது படத்தை இயக்கும் இயக்குனர் இவர் தான் என்று ஒரு தகவல் இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிக்க சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரிக் குவித்த டான் படத்தினை இயக்கிய சிபி சக்ரவர்த்தி தான் ரஜினிகாந்தின் அடுத்த படத்தினை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு இன்று நடைபெறும் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் பரவலாக பரவப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post