அடுத்த மாதம் துவங்கும் “தலைவர் 170” படப்பிடிப்பு!

 அடுத்த மாதம் துவங்கும் “தலைவர் 170” படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கிறார் ரஜினிகாந்த்.

தனது அடுத்த படத்தின் பணிகளையும் தற்போது துவக்கியிருக்கிறார். ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ஆம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மிக பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் இன்னும் ஓரிரு தினங்களில் துவங்கப்பட இருக்கிறது.

போலி என்கெளண்டர் பற்றிய கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர், ஷர்வானந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
இன்னும் உறுதிபட தகவல் வெளியாகவில்லை.

 

Related post