ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்..!!

 ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்..!!

ஜெயிலர் படத்தின் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை இன்று வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்தின் 171வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், அன்பறிவு மாஸ்டர்கள் சண்டைப் பயிற்சி இயக்குனர்களாக பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

Related post