பான் இந்தியா படமாக உருவாகும் “தலைவர் 170”!!

 பான் இந்தியா படமாக உருவாகும் “தலைவர் 170”!!

ஜெயிலர் படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனதுஅடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது இருந்து வருகிறார் ரஜினி.

தனது 170வது படமாக உருவாகும் இப்படத்தை ஞானவேல் இயக்கவிருக்கிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பினை துவக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.

இப்படத்தில், மலையாள நடிகர்களான மஞ்சு வாரியர், பஹத் பாசில், பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகரான ராணா டக்குபதி உள்ளிட்ட பிரபலங்கள் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post