மீண்டும் தளபதியோடு; “தளபதி 68” படத்தை இவர் தான் இயக்க போகிறாராம்!?

 மீண்டும் தளபதியோடு; “தளபதி 68” படத்தை இவர் தான் இயக்க போகிறாராம்!?

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தினைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் அவரது 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், தளபதி 68 படத்தில் விஜய்யும் அட்லீயும் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக செய்தி பரவி வரும் நிலையில், அது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே கூறலாம்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் விஜய்யின் தளபதி 68 படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ஷாருக்கானின் ஜவான் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் அட்லீ, இப்படத்தை முடித்த பின்னர் தான் தளபதி 68 படத்துக்கான பணிகளை தொடங்க இருக்கிறாராம். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு இறுதியில் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய்யும் அட்லீயும் நான்காவது முறையாக இணையவிருக்கிறார்கள்.

ஏற்கனவே விஜய் – அட்லீ கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு வசூலையும் வாரிக்குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post