கமல்ஹாசனின் “தக் லைஃப்” படத்தில் இணையும் இளம் நடிகர்!

 கமல்ஹாசனின் “தக் லைஃப்” படத்தில் இணையும் இளம் நடிகர்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 234வது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான அறிவிப்பு வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது.

படத்திற்கு தக் லைஃப் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, மற்றும் துல்கர்சல்மான் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கவிருக்கின்றனர்.

மேலும், விருமாண்டி படத்திற்கு பிறகு அபிராமியும் கமலோடு கைகோர்க்கவிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக்கும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related post