பிரம்மாண்டமாக நடைபெறும் தனுஷின் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா!

 பிரம்மாண்டமாக நடைபெறும் தனுஷின் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தில் நித்யா மேனன், ப்ரியா ப்வானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனுஷோடு கைகோர்த்திருக்கிறார் அனிருத்.

இப்படத்தின் ஒரு பாடலான “தாய் கிழவி..” எனத் தொடங்கும் பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்தது.

இந்நிலையில், தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த இசை வெளியீட்டை மிகவும் பிரம்மாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post