விக்ரம்; ஒரு மாதத்தில் சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா.?

 விக்ரம்; ஒரு மாதத்தில் சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா.?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிக்க உருவாகி கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் ”விக்ரம்”.

படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 400 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலை வாரிக்குவித்துள்ளது.

இந்நிலையில், படம் வெளியாகி 31 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இதுவரை இப்படம் சென்னையில் 17 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவிலேயே அதிக இலாபத்தை கொடுத்த திரைப்படம் என விக்ரம் திரைப்படம் இடம் பிடித்திருப்பது அனைவரையும் கொண்டாட வைத்துள்ளது.

 

Related post