தளபதி 67ல் இணைந்த மேலும் ஒரு பிரபலம்.. இது வேற லெவலா இருக்குமே!

 தளபதி 67ல் இணைந்த மேலும் ஒரு பிரபலம்.. இது வேற லெவலா இருக்குமே!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 67 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும், ஏறக்குறைய முடிவானதாகவே தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் பல நட்சத்திரங்கள் அடுத்தடுத்து கைகோர்க்கவிருப்பதாக தொடர்ந்து தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

பிரபல இயக்குனரும் தற்போதைய ட்ரெண்டிங் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. கெளதம் நடித்த படங்கள் தற்போது திரும்பி பார்க்கும்படியாக இருப்பதால், இவரும் இப்படத்தில் இணைவது ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது.

 

Related post